சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடிப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
துடுப்பாட்டத்தில் இஷான் கிஷன் 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் 287 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.