சந்நிதியான் ஆச்சிரமத்தால் மக்களுக்கு பல இலட்சம் பெறுமதியான உதவி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் செஞ்சோலை மாதிரி கிராமம், தேறாங்கண்டல் மக்களுக்கு 536,000 ரூபா பெறுமதியில் அத்தியவசியமான உணவுப் பொருள்கள் நேற்று சனிகிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
செஞ்சோலையில் வளர்ந்து தற்போது கிளிநொச்சி மலையாளபுரத்தில் உள்ள செஞ்சோலை மாதிரி கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் நலிவடைந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 24 குடும்பங்களுக்கு ரூபா 96,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய், தேறாங்கண்டல் கிராமத்தில் வசிக்கின்ற பொருளாதாரத்தால் நலிவடைந்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட 110 குடும்பங்களுக்கு ரூபா 440,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
இந்த உலர் உணவுப் பொருட்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், அவரது தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளரான. தயாபரன், தேறாங்கண்டல் கிராம சேவையாளர் ஆகியோருடன் நேரில் சென்று வழங்கிவைத்தார்.
இதேவேளை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் வாராந்த சிறப்பு நிகழ்வாக இன்னிசை விருந்து இடம் பெற்றது.
இ.நிறோஜனின் வயலின், நக்கீரனின் மிருதங்க இசை, மற்றும் கேதாரநாத் ஆகிய அணிசெய் கலைஞர்களின் இசையில் து.மதுசிகனின் பாடல்கள் இடம்பெற்றன.
இதில் சிறப்பாக பாடல் பாடிய து.மதுசிகன் அவர்கள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்