சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ள நிவாரண உதவிகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா 295,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவனுக்கு 45,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலைய தலைவர், க.செந்தூரன் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இவ் உதவிகள் வழங்கும் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் உதவிகளை வழங்கிவைத்தார்.இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்களும் கலந்துகொண்டனர்.