
சத்தம் போடாமல் சாதனை செய்…..
சத்தம் போடாமல் சாதனை செய்
மண்ணுக்குள் சுழியோடி வளர்ந்து, இறுகி, தன் முதுகில் பெரு விருட்சத்தை நிலைநிறுத்துகின்றன வேர்கள். இந்த முயற்சி, தங்களால் முடியாது என எண்ண, வேர்களுக்கு நேரமும் இல்லை. எங்கெல்லாம் நீர், பசளை உள்ளதோ, அங்கெல்லாம் தேடி, தேட்டம் தேடும் மெல்லிய சிறுவேர், பக்கவேர், ஆணிவேர் என, தாய்மை உணர்வுடன் மரத்தைத் தாங்குகின்றன.
ஆனால் மனிதன், தனக்காகவும் தன் மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உலகுக்காகவும் உண்மையான பொறுப்புணர்வுடன் தாங்கி நிற்கின்றானா?
சுமைகளைத் தாங்க முடியாமல் ஓடும் தந்தை; பெற்றோரை மட்டுமல்ல, தம்பிமாரை, அக்காமாரை உடன்பிறப்புகளை விட்டோடும் பிள்ளைகள் என்று பொறுப்பற்ற சம்பவங்கள், இன்று ஏராளம், பொறுப்புடன் கடமைகளை ஏற்பதும் உளமார்ந்த திருப்திதான்.
உதவி கேட்டு, உங்களை யாராவது நாடினால், உங்களுக்கு வலிமை உண்டு என நம்பித்தானே அவர்கள் வருகிறார்கள். எதுவுமே வெளியே தெரியாமல், தமது வரிசை, வேர்கள் மௌனத்துடன் உருவாக்குகின்றன.
சத்தம் போடாமல் சாதனை செய்; உத்தம மைந்தா, உலகைத் தூக்கி நிறுத்து.