சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 மீனவர்கள் கைது

திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, மூதூர் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட 25 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மீனவர்களின் 5 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்