சட்டசவிரோத மணல் ஏற்றிய டிப்பரை துரத்தி சென்ற பொலிஸார் : மின்வயரை துண்டித்து இருளாக்கி விட்டு தப்பி சென்ற சாரதி!

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்தி சென்ற போது சாரதி தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டு பயணித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்திச்சென்று டிப்பரை நிறுத்திய போது டிப்பரின் சாரதி அங்கிருந்த மின்சார வயரினை அறுத்து மின்துண்டிப்பை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதன்பின் மின்சார சபைக்கு அறிவித்த பொலிஸார் தப்பிச்சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.