சட்ட விரோத தேக்கு மரபலகை கடத்தல்!
சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி தேக்கு பலகைகளை கொண்டு சென்ற நால்வரை கந்தகெடிய பொலிஸார் கைது செய்ய்துள்ளனர்.
கந்தகெடிய பாலாகொல்ல பகுதியில் இருந்து 401 தேக்கு பலகைகளை பதுளை நோக்கி கொண்டு செல்வதாக கந்தகெடிய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயகவின் ஆலோசனைக்கு அமைய உடன் வீதித்தடையை அமைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்திய போது லொறி ஒன்றில் தேக்கு பலகைகள் கொண்டு செல்வது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இதன்போது 52,39,32,31 வயதுகளை உடைய பதுளபிட்டி பகுதியை சேர்ந்த இருவரும் பாலாகொல்ல பகுதியை சேர்ந்தவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த தேக்கு பலகைகள் ஆறு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பெறுமதியுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்