
சங்ககாரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 8,000 ஓட்டங்களை ஸ்மித் தனது 151 ஆவது இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார்.
இதற்கு முன்னர் இலங்கையின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார இந்த சாதனையை படைத்திருந்தார். 8000 ஓட்டங்களை எட்டுவதற்கு அவருக்கு 152 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன.
இந்நிலையில், அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில், இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவன் ஸ்மித், 60.10 என்ற சராசரியில் 8,010 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் இதுவரையில் 27 டெஸ்ட் சதங்கள் பதிவுசெய்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்