
கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற விமான நிறுவன பணியாளர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 4.6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பாலங்களை கடத்த முயன்ற தனியார் விமான நிறுவன பணியாளர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், தங்கம் மற்றும் தங்க பாலங்களை தனது பயணப் பையில் மறைத்து வைத்து, விமான நிறுவன பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றுள்ளார்.
இதன்போது சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து கடத்தல் தங்கம் மீட்கப்பட்டது.
அவரிடமிருந்து மொத்தமாக ஒரு கிலோகிராம் மற்றும் 163 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க பாலங்கள் மீட்கப்பட்டதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 4.6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
