கொழும்பை உலுக்கிய பலவிபத்து : சாரதி கஞ்சா பாவனையில் இருந்தமை உறுதி
பொரளை மயானத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளதோடு ஆறுவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிறிய கிரேன் பல வாகனங்கள் மோதியதைக் காணலாம் சிசிரிவி காட்சிகள் மூலம் காண முடிந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பின்னரான மருத்துவ பரிசோதனையில், விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் கஞ்சா உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மரம் வெட்டப் பயன்படுத்தப்பட்ட கிரேன், ராஜகிரியவிலிருந்து பொரளை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பொரளை மயானத்திற்கு அருகில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த நேரத்தில், கிரேன் 06 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்களில் மோதியதாக தெரிவிக்கப்பட்டது.