கொழும்பு துறைமுக வளாகத்தில் 88 என்புக்கூடுகள் கண்டுப்பிடிப்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின் போது ஜூலை 2024 இல் முதன்முதலில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய தொல்பொருள் நிபுணத்துவத்துடன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையில் இதுவரை நாடு முழுவதும் 17 மனித புதைகுழிகள் பதிவாகியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.