கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை ஆரம்பம்
கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை நாளை திங்கட்கிழமை முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர், யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.