கொழும்பு – கட்டுநாயக்கவிற்கு புதிய பேருந்து சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இன்று வியாழக்கிழமை முதல் தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எவரியாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்த பேருந்து சேவை, இன்று முதல் விமான நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும்.
தற்போது தனியார் துறை பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் பொதிகளை எடுத்துச் செல்லும் வசதியுடன் கூடிய பேருந்துகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து சேவை 290 ரூபாய் கட்டணத்தில் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24