கொழும்பில் போதைப் பொருளுடன் வெளிநாட்டவர் கைது
கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஊநு) போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸாரின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து இவர் 50.410 கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் வசித்து வருவது மேலும் தெரியவந்தது.
பம்பலப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.