கொல்கத்தாவில் தனியார் விடுதியில் தீ விபத்து – 14 பேர் பலி

இந்தியா – கொல்கத்தாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

6 மாடிகள் கொண்ட கட்டடத்தின் முதல் தளத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நேற்றிரவு 8.15 அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தையடுத்து ஏற்பட்ட புகையை சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 பேர் உயிரிழந்தனர்.

மற்றுமொருவர் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க