
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை!
கொரோனா தொற்று உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மணமகள் தேவை என்ற விளம்பரம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு, அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று, தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் சமூக வலைத்தளத்தில் கடுமையாக வைரலாகி வருகின்றது
கொரோனா அதிகரித்த நேரத்தில் உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.