கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில்!

இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை இன்று திங்கட்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக இராஜாங்கனை சத்தாரதன தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால், அவர் அநுராதபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

இராஜாங்கனை சத்தாரதன தேரர், சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களால், இனங்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்திற்கொண்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

பாஹியன்கல சாகர தேரரினால் குறித்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்