கூலி திரைப்படத்தின் இசை வெளியீடு எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

கூலி திரைப்படம்  எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகிறது.

இந்நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வௌியீடு எதிர்வரும் ஜூலை 27ம் திகதி நேரு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.