கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
அம்பலாங்கொடை ஹிரேவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு இருவர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் அங்கு வருகை தந்த நபர் ஒருவர் அவர்களுடன் முரண்பட்டுள்ளார்.
அவர்களில் ஒருவர் குறித்த நபரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்