கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

கம்பஹா – வெயாங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கம்பஹா – வெல்பொல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.