
குஷ், ஐஸ் போதைப் பொருட்கள் மீட்பு
கம்பஹா – சீதுவை பகுதியில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு பொருட்களை பறிமாற்றும் மையம் ஒன்றில் 6 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குஷ், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் 7 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
