குழந்தையின் உயிரைப் பறித்த மரணக்கிணறு
தம்பகல்ல மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட கொண்டாட்ட நிகழ்வின் போது, வோல் ஒஃப் டெத் (மரணக் கிணறு) எனப்படும் விளையாட்டு பொறியின் படியிலிருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வயதும் 11 மாதமுத் நிரம்பிய குழந்தையே பலத்த காயங்களுடன் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று புதன் கிழமை காலை உயிரிழந்துள்ளது.
வோல் ஒஃப் டெத் இன் உரிமையாளரின் லொறி சாரதியின் குழந்தையே இவ்வாறு படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக வோல் ஒஃப் டெத் இன் பாதுகாப்பு மற்றும் அலங்காரத்திற்காக குழந்தையின் தந்தை வந்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்