குழந்தை கேட்டு நச்சரித்த காதலிக்கு காதலனால் நேர்ந்த துயரம்
குழந்தை கேட்டு தொல்லை செய்த காதலியை காதலன் கழுத்தை அறுத்த கொலை செய்த சம்பவம் இந்தியாவில் கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்துள்ள உடுமாபாரா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இங்கு தேவிகா (34) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இவருக்கும், போவிக்கானம் என்ற பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சதீஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், தேவிகா மற்றும் சதீஷ் இடையே இரகசிய காதல் உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருப்பர்.
இவ்வாறே சுமார் 9 வருடங்களாக இருவரும் காதல் உறவில் இருந்துள்ளனர். இந்த சூழலில் சதீஷின் குழந்தையை தேவிகா பார்த்துள்ளார். குழந்தையை பார்த்ததும், தேவிகாவுக்கு சதீஷ் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார்.
எனவே சதீஷிடம் குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் அவரது குழந்தையை தன்னிடம் கொடுக்க வேண்டும் அல்லது தனக்கு ஒரு குழந்தையை கொடு என்றும் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேவிகாவை, சதீஷ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் அவர் சமாதானமாகவில்லை.
இந்த நிலையில், சம்பவத்தன்று இருவரும் தனியார் விடுதியில் சந்தித்து கொண்டனர். அப்போது தேவிகா மீண்டும் சதீஷிடம் குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சதீஷை தேவிகா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்இ தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்
பின்னர் நேராக அதே கத்தியை எடுத்து கொண்டு ஆவூர் காவல் நிலையத்தில் சதீஷ் சரணடைந்துள்ளார். மேலும் தான் கொலை செய்ததற்கான காரணத்தை கூறினார்.
இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிந்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
அதோடு தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்ட தேவிகாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்