குளிரூட்டப்பட்ட வாகனமும் காரும் மோதுண்டு விபத்து: ஒருவர் காயம்
-வவுனியா நிருபர்-
வவுனியா நெடுங்கேனி சந்தியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட மீன்கள் ஏற்றும் வாகனமும் காரும் மோதுண்டே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், காரின் சாரதி காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நெடுங்கேனி போக்குவரத்து பிரிவு பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்