
குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில்
மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்டத்தில் இன்று ஞாயிற்று கிழமை மாலை 4 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளையில் தேயிலை செடிகளின் கீழ் கட்டப்பட்டு இருந்த குளவி கூடு கலைந்ததால் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தோட்ட வாகனங்கள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரபட்ட நிலையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்
