குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிறார்.

ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விடயம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேண்ட்ரா மெரேரா ஆகியோரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்தது .

நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போது, லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து பங்கேற்றக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.