
குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் நாடுகள்
அதிகளவில் குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் நாடுகளில் பிரான்சும் இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் இருக்கும் நாடுகளான, Luxembourg நாட்டின் குறைந்தபட்ச வேதனம் 2,296 யூரோக்கள், நெதர்லாந்து நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் 2,257 யூரோக்கள்.
அயர்லாந்தின் குறைந்தபட்ச சம்பளம் 2,034 யூரோக்கள், பெல்ஜியம் நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் 1,959 யூரோக்கள், ஜேர்மனியின் குறைந்தபட்ச சம்பளம் 1,538 யூரோக்கள், ஸ்பெயின் நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் 1,198 யூரோக்கள்.
குறைந்த அளவில் குறைந்தபட்ச சம்பளம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு பல்கேரியா.
அந்நாட்டின் குறைந்தபட்ச சம்பளம் 427 யூரோக்கள். பிரித்தானியாவில் வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 2022 யூரோக்கள்.
இந்நிலையில், வரும் ஆண்டில், அதாவது, 2026இல் பிரான்ஸ் தனது குறைந்தபட்ச சம்பளத்தை 20 யூரோக்களாக அதிகரிக்கவுள்ளது.
அதாவது, பிரான்சின் குறைந்தபட்ச சம்பளம் 2026இல் சுமார் 1,446 யூரோக்களாக இருக்கும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
