குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி-டெஸ்லா அறிவிப்பு
உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய மின்சார வாகன சந்தையில் அதிகரிக்கும் போட்டியால் , டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நிறுவனர் எலோன் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக நிறுவனத்தின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில், டெஸ்லாவின் வருவாய் 22.5 பில்லியன் அமெரிக்கடொலராகக் குறைந்துள்ளது .
இதற்கு பதிலாக, டெஸ்லா நிறுவனம் தனது நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், குறைந்த விலையில் மின்சார கார்களை விற்பனை செய்து வியாபாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
எலோன் மஸ்க் மற்றும் அவரது டெஸ்லா குழுவின் எதிர்காலதிட்டங்கள் , மின்சார வாகனங்கள் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது .