குருதி நாளங்கள் பாதிப்படையும் அபாயம்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த நாளங்கள் முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்தோடு இத்தொற்றின் விளைவு ஆண்களை விட பெண்களில் அதிகம் என்பதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்விலேயே இவ்விடயங்கள் தெரிய வந்துள்ளன.
2020 செப்டம்பர் முதல் 2022 பெப்ரவரி வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜேர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
‘கொவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது’ என்றும் பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.