குடியிருப்புக்குள் புகுந்து இளைஞனை வெட்டிக்கொன்ற கும்பல் தலைமறைவு
பொரளை சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த மூவர், அங்கிருந்த நபரொருவரை கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதன் போது டி.ஆர்.பிரதீப் குமார் (வயது – 28) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு ஒன்றின் காரணமாகவே சந்தேகநபர்கள் மூவரும் நேற்று திங்கட்கிழமை வீட்டுக்குள் புகுந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்