கிழக்கு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கான பட்டய கணக்காளர் நிறுவனத்தில் டிப்ளோமா

-கிண்ணியா நிருபர்-

இலங்கை பட்டயக் கணக்காளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி நிதி முகாமைத்துவத்திற்கான டிப்ளோமா பாடநெறி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த பாடநெறி உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களுக்கு நிதி முகாமைத்துவம் பற்றிய அறிவையும் திட்டமிடல் செயன்முறை பற்றிய விரிவான புரிதலையும் வழங்குகின்றது.

இந் நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தலைவர் கனக, உள்ளூராட்சி ஆணையாளர் வி.மணிவண்ணன், அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்