கிறிஸ்மஸ் சந்தைக்குள் புகுந்த கார் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜேர்மனியின் மாக்டெபர்க் நகரில் கிறிஸ்மஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பலியானவர்களில் சிறுவன் ஒருவனும் அடங்குவதாகவும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 வயதான சவூதி அரேபிய வைத்தியர் ஒருவரே தனியாக காரை செலுத்தி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.