கிரிக்கெட் தேர்வுக்குழுவை மாற்றினால் மட்டும் மாற்றம் ஏற்படாது
கிரிக்கெட் தேர்வுக் குழுவை மாற்றினால் மட்டும் இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் மாற்றம் ஏற்படாது, என சர்வதேச கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.