கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம் ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்-

ஆன்மீக ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான கல்வி சமூகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சமூக நிறுவனங்களின் பொறுப்புகளும் எதிர்கால செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்” என்கின்ற தொனிப்பொருளில் உலமா சபை, பள்ளிவாயல்கள் சம்மேளனம், சூரா சபை, பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம் ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பள்ளிவாயல் நிர்வாகங்கள் ஒவ்வொரு மகல்லாவிலும் எவ்வாறு எமது எதிர்கால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்றும் பள்ளி நிர்வாகிகங்களின் நிர்வாக அதிகாரத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்றும் செயல்திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.

இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, உலமா சபை, சூரா சபை உட்பட சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.