கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு
2025 ஆம் ஆண்டுக்கான கிண்ணியா பிரதேச காலாசார அதிகார சபையின் நிர்வாகத் தெரிவு கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடை பெற்றது.
கிண்ணியா கலாசார அதிகார சபையின் தலைவராக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி, கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.நிஜாம்தீன் (மேற்பார்வை), ஒருங்கிணைப்பாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி,உப தலைவராக ஓய்வு நிலை அதிபர் எம்.ஏ. சலீம்(நாடக கலைஞர்),செயலாளராக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.றியாத்(நாடக கலைஞர்) ,உபசெயலாளராக வை.தினேஷ்காந்(ஓவியர்), பொருளாளராக எம்.ஏ.முகமட் (ஊடகவியலாளர்), ஆலோசகர்களாக (எழுத்தாளர்களான) எச்.எம்.ஹலால்தீன்,ஏ.எம்.கஸ்புள்ளா, கலாபூஷணம் திருமதி சித்தி சபீனா வைத்துல்லா ஆகியோர் இதன் போது தெரிவு செய்யப் பட்டனர்.