கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து
மாலம்பே, அரங்கல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
