காலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த தகவலை அறிந்த காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்திற்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





