
கார் – வேன் மோதி விபத்து
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் முந்தல், நவத்தன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த இரண்டு பெண்களும் ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளார்கள்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
