கார் – உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

சிலாபம் – இனிகொடவெல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தால் உழவு இயந்திரம் மற்றும் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், உழவு இயந்திரத்தின் சக்கரம் ஒன்று விலகி அருகில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.