காய்ச்சல் காரணமாக யாழில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
-யாழ் நிருபர்-
யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை – ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், கடந்த 21ஆம் திகதி காலை இவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் குணமாகாததால் 22ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
