காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

யாழ்ப்பாணத்தில் காதலியின் குறுந்தகவலை பார்த்த காதலன் நேற்று திங்கட்கிழமை தவறான முடிவு எடுத்து தன் உயிரை மாய்த்துள்ளார்.

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ” என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் ” என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்