காட்டுத்தீயை அணைக்க நீர் எடுக்கச் சென்ற ஹெலிகாப்டர் – நடந்தது என்ன?
ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் காட்டுத்தீ பரவி வருகிறது.
இந்தத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பலத்த வெப்பம், வறட்சி மற்றும் காட்டுத்தீயின் பாதிப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.
அத்துடன் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மொரேன் 29 ரக ஹெலிகாப்டர், நீர் எடுக்க சென்றபோது ஏரியில் விபத்துக்குள்ளானது.
ரோஸ்போர்டென் நகரத்திற்கு அருகே உள்ள ஏரியில் இருந்து நீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானாலும் விமானியும் தீயணைப்பு வீரரும் பாதுகாப்பாக வெளியேறி தப்பித்துள்ளனர்.