கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பா? இல்லையா?
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் மாத்தளை மாவட்ட சபை உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, பரீட்சை ஆணையாளர் தனது அறிக்கையின் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.