கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த செல்லத்துரை வீதி, பெரிய நிலாவனை 01 சேர்ந்த பூசாரி சந்திரன் (வயது – 54) என்பவரே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்