கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு
-அம்பாறை நிருபர்-
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலிலுல் ரஹ்மான் இசிரேஷ்ட உளவளத் துணையாளர் திருமதி ராசிதா நௌசாத் கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் சுலைமாலெவ்வை முஹம்மது நாஸிறூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் திபர் எம்.எச்.எம் அன்ஸார் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள் குழு நிகழ்ச்சிகள் என்பன் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
மேலும் இதன் போது சிறுவர் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பிரதம அதிதியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்