கலால் துறை அதிகாரிகள் ஐவர் கைது

கலால் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம் அளிக்க வந்தபோது இந்த ஐந்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட கலால் துறை அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.