“கலாமித்ரா -2026” ஆக்க இலக்கியப் போட்டிகள்!

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தும் “கலாமித்ரா -2026” விருது வழங்கும் விழாவை முன்னிட்டு ஆக்க இலக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்துடனும் சமூகத்திற்கு போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் புதிய அலை கலை வட்டத்தின் பிரதம நிர்வாகம் இளைஞர் அணி,  மற்றும் விழித்தெழு நெஞ்சே அமைப்பு என்பன இந்த தமிழ் படைப்பாக்கப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளன.

போட்டிகள் :

1) கட்டுரை :
பங்குபற்றுனர் 16 வயது 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து கட்டுரையை 2000 சொற்கள் அடங்கலாக எழுதிஅனுப்ப வேண்டும்.

தலைப்பு

1. போதையின் பாதையில் பேதை நெஞ்சங்கள்

2. வளமான எதிர் காலத்துக்கு வேண்டும் போதை ஒழிப்பு

2) சிறுகதை :

ஒவ்வொரு பங்குபற்றுனரும் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து ஒரு சிறுகதையை 1500 சொற்கள் அடங்கலாக எழுதி அனுப்பலாம்.

தலைப்பு

1. மறுமலர்ச்சி காணும் போதைப் பொருள் ஒழிப்பு

2. வன்கொடுமையும் சிற்றுயிரும்

3) புதுக்கவிதை :

ஒவ்வொரு பங்குபற்றுனரும் 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து ஒரு புதுக்கவிதையை சமர்ப்பிக்கலாம்.

1. அடங்கட்டும் போதைகளின் ஆட்டம்

2. என்று தணியும் இந்த போதையின் தாகம்

 

4) ஹைக்கூ கவிதை :

ஒவ்வொரு பங்குபற்றுனரும் போதையொழிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கு ஏற்றவகையில் ஐந்து ஹைக்கூ கவிதைகளை சமர்ப்பிக்கலாம்.

5) குறும்படம் :

ஒவ்வொரு குறும்படமும் போதையொழிப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான கருப் பொருளை கொண்டதாக 10 முதல் 15 நிமிட நேர வரையறையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதனை எழுத்துப் பிரதியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

வெற்றி கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் விருதும் வழங்கப்படும்.

பொது நிபந்தனைகள்

  • ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்குபற்றலாம். ஆனால் ஒருவகை போட்டியில் ஓர் ஆக்கம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
  • அனைத்து சமர்ப்பிப்புகளும் சுயமானதாகவும், வெளியிடப்படாத படைப்புகளாகவும் இருக்க வேண்டும்.
  • ஏற்கனவே வெளிவந்த பிறருடைய ஆக்கங்களையோ அல்லது அவற்றை தழுவியோ எழுதலாகாது.
  • ஏற்கனவே பரிசு பெற்ற படைப்புகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.
  • படைப்புகள் A4 கடதாசியில் ஒரு பக்கத்தில் தெளிவாக கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லது கணினியில் அச்சிடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • பக்க இலக்கம் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • பங்குபற்றுனர் தங்கள் சமர்ப்பிப்பின் பிரதியை தம்வசம் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் சமர்ப்பிக்கப்பட்டவை மீண்டும் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
  • அனைத்து சமர்ப்பிப்புகளிலும் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும்:
  1.     விண்ணப்பதாரரின் பெயர்
  2.  வயது
  3. படைப்பின் தலைப்பு
  4. பக்கங்களின் எண்ணிக்கை
  5.  நிரந்தர முகவரி
  6.  தொலைபேசி /வாட்ஸ்அப் இலக்கங்கள்
  7.  மின்னஞ்சல் முகவரி
  8.  படைப்பு சுயமானது என்பதை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துதல்.

சமர்ப்பிப்பதற்கான கடைசி திகதி: 15 டிசம்பர் 2025

சமர்ப்பிப்புகளை பின்வரும் முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபாலில் அனுப்பலாம் அல்லது நேரடியாக கையளிக்கலாம்:

செயலாளர், (கலாமித்ரா – 2025)
புதிய அலை கலை வட்டம் இல.53 சங்கமித்த மாவத்த
கொழும்பு-13

Secretary ( Kala Mithra – 2026)
New Wave Arts Circle
No.53 Sangamiththa Mawatha-Colombo-13

 

மதிப்பீடு மற்றும் விருதுகள் :

அனைத்து படைப்புகளும் இலக்கிய நிபுணர்கள் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.

வெற்றியாளர்களுக்கான பரிசுகள் 2026 ஜனவரி 30 இல் நடைபெறவிருக்கும் எமது விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

 

மேவதிக தகவல்களைப் பெற,

தலைவர்.
திரு.ஷண்மு.
0776274099

செயலாளர்.
திரு. சி. அழகேஸ்வரன்.
0773910203 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.