கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொருட்கள் வழங்கல்

 

 

-மஸ்கெலியா நிருபர்-

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மிகவும் வருமானம் குறைவாக உள்ள 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுமார் 5000 ரூபாய் பெறுமதியான போசாக்கு பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வியாழக்கிழமை மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களின் தலைமையில் வழங்க பட்டது.

இந் நிகழ்வு இன்று மதியம் 3.00 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் உரையாற்றிய போது இம் முறை எமது மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு முதல் முறையாக செய்யப்பட்டது.

அதன் படி 2026 ஆம் ஆண்டு முதல் நாளில் எமது பிரதேச சபை உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் பணியாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு பொதிகள் வழங்கப்பட்டன.