
‘கருப்பு பல்சர்’: டிரெய்லர் வெளியானது!
நடிகர் தினேஷ் இருவேடங்களில் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 30-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் தினேஷ், சென்னையைச் சேர்ந்த ஒருவராகவும் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரராகவும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு முன்விரோதத்தால் ஒரு தினேஷ் கொல்லப்பட, அவருடைய ‘கருப்பு பல்சர்’ பைக் சென்னை தினேஷிடம் வந்து சேர்கிறது. அதன் பிறகு நடக்கும் அதிரடிச் சம்பவங்களே படத்தின் கதையாகும்.
இயக்குநர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். ரேஷ்மா வெங்கடேஷ், மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்பராஜ் ராஜேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துப் பாடல்களை எழுதியுள்ளார்.
ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த இந்தத் திரைப்படம் தினேஷின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
