கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

கண்டியில் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்துஇ வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று ஞாயிற்று கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்